(சூசைப்பிள்ளை ஜோசப் அன்ரனிதாஸ்,
திருகோணமலை,
08.04.1964 - 15.05.2009)
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் தம்பதிகளின் இரண்டாவது மகவாக 1964ம் ஆண்டு பிறந்தார் அன்ரனிதாஸ். ஆனால் அன்ரனிதாஸின் மூதாதையர்கள் யாழ் மாவட்டம் மானிப்பாயிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள்.
பிறப்பால் கிறித்தவராக இருந்தபோதும் சிறு வயது அன்ரனிதாஸுக்கு முற்போக்கு சிந்தனைகள் அதிகம். ஜாதியும் மதமும் மக்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்காக பயன்படுகிறதே என்று வருத்தப்படுவதுண்டாம் அவர்.
திருகோணமலையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் பாதிக்கப்படுவது கண்டு கொதித்துப் போயிருந்தார் இளைஞனாகவிருந்த அவர். புலிகள் இயக்கத்தில் சேர விரும்பினார் ஆனாலும் குடும்ப நிலமை தடுத்தது.தகுந்த சந்தர்ப்பம் ஒன்றுக்காக காத்திருந்த அவருக்கு 1983ல் இடம்பெற்ற இனக்கலவரம் நல்ல சாக்காக அமைந்தது. அவ்வளவுதான் குடும்ப பந்தங்களை அறுத்தெரிந்து புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டார்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment