பார்வதி அம்மாளை நிபந்தனையின்றி தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்றும், அவருக்கு அரசு செலவில் சிகிக்சை அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது.
தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. வேறு சில நிபந்தனைகளும் கூறப்பட்டன.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment