(அன்ரன் ஸ்டானிஸ்லாஸ் பாலசிங்கம்
கரவெட்டி, யாழ்ப்பாணம்
மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006)
பாலா அண்ணையின் வரலாற்றை ஒரு பகுதிக்குள் அடக்க முடியாது. ஆகவே போராட்ட வழ்வுக்கு முன்னரான காலம் பின்னரான காலம் என்று இரண்டாகப் பிரித்துத் தரப்படுகிறது. இது போராட்ட வாழ்வுக்கு முந்திய பகுதி. இனி அதைப் பார்ப்போம்:
மட்டக்களப்பு மாவட்ட இந்துவான அப்பாவுக்கும் யாழ் மாவட்ட கிறித்தவரான அம்மாவுக்கும் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார் பாலா அண்ணை அவர்கள்.
மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் மின்சார பொறியியலாளராக வேலை பார்த்த இவரின் அப்பாவும் அதே மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக வேலை பார்த்த அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவருக்கு மூத்தது ஒரு சகோதரியாவார்.
பாலா அண்ணையின் தாத்தா மட்டக்களப்பு மண்டூரில் சைவக் குருக்களாக இருந்தவர். தாய் யாழ்ப்பாணத்தில் மார்டின்ஸ் வீதியில் வசித்து வந்தவர்.
பிற்காலத்தில் தந்தை இறந்த பிறகு இவர் தனது தாயுடனும் சகோதரியுடனும் யாழ் வடமராட்சிப் பிரதேசத்தின் கரவெட்டியில் வசிக்கத் தொடங்கினார்.
பாலா அண்ணை தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி புனித இருதயக் கல்லூரியிலும் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்றார்.
மேலும் படிக்க இங்கே அழுத்தவும்
No comments:
Post a Comment