Showing posts with label ஜாக்கிசான். Show all posts
Showing posts with label ஜாக்கிசான். Show all posts

Sunday, July 11, 2010

'லிட்டில் பிக் சோல்ஜர்' பட விழாவிற்காக சென்னை வரும் ஜாக்கி சான்!













ஹாலிவுட்டையே சீனாவுக்கு திருப்பிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சான் மீண்டும் சென்னை வருகிறார். தனது படத்தின் பிரிமியர் ஷோவில் அவர் பங்கேற்கிறார்.

ஹாலிவுட்டுக்குப் போகாமலேயே, ஹாங்காங்கிலும் சீனாவிலும் இருந்தபடி அதிரடிப் படங்களில் நடித்து தயாரித்து இயக்கி வெற்றி கண்டு வருபவர் ஜாக்கி சான். வட அமெரிக்காவில் அதிக வசூலைக் குவிக்கும் ஹாலிவுட்டைச் சேராத ஒரே ஆசிய நட்சத்திரம் இவர்தான்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் கமல் நடித்த தசாவதாரம் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக சென்னை வந்தார் ஜாக்கி சான். இப்போது மீண்டும் இரண்டாவது முறையாக சென்னை வருகிறார் ஜாக்கி. முன்பு அவரை சென்னைக்கு அழைத்து வந்தவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இப்போது அழைத்து வருபவர் ரவிச்சந்திரனின் அண்ணன் விஸ்வாஸ் சுந்தர்.

ஜாக்கி நடித்து விரைவில் வெளியாக உள்ள 'லிட்டில் பிக் சோல்ஜர்' படத்தின் இந்திய உரிமையை அவர் பெற்றுள்ளார். இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. படத்தின் ஆங்கில - தமிழ் பிரத்தியேகக் காட்சி சென்னை உள்ளிட்ட மூன்று நகரங்களில் நடக்கிறது. இந்தக் காட்சிகளுக்கு கட்டாயம் வருவதாக சுந்தரிடம் வாக்களித்துள்ளாராம் ஜாக்கி சான்.

மேலும் ஆங்கிலத்தில் சினிமா செய்திகளுக்கு...