
மேஜர் ஆர் மன்னார் (கமல் ஹாசன்) முன்னாள் ராணுவ அதிகாரி, இன்னாள் டிடெக்டிவ். அம்புஜாக்ஷி என்கிற அம்பு (த்ரிஷா) நிஷா என்னும் பெயரில் பிரபல நடிகை. மதன கோபால் (மாதவன்) பெரிய தொழிலதிபர். மதனும் அம்புவும் காதலிக்கிறார்கள். அம்புவின் தொழிலை வைத்து அவளைச் சந்தேகப்படும் மதன் மன்னாரை விட்டு அவளை வேவு பார்க்கச் சொல்கிறான். மன்னாரின் நண்பன் கேன்சரால் தாக்கப்பட்டு மரணப் படுக்கையில் கிடக்க, அவனுக்காகப் பணம் சம்பாதிக்க வேண்டிய பொறுப்பு மன்னாருக்கு. எனவே இந்த வேலையை ஏற்றுக்கொள்கிறான். அம்புவின் தோழி தீபா (சங்கீதா), டைவர்ஸ் ஆனவள். அம்புவும் தீபாவின் குடும்பமும் ரோம், பார்சிலோனா என்று கப்பலில் உல்லாசப் பயணம் செல்கிறார்கள். இந்தப் பயணத்தில்தான் அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல வேண்டிய பொறுப்பு மேஜருக்கு. அம்புவின் நடவடிக்கைகளைப் பார்த்து மேஜர் அவளுக்கு நற்சான்றிதழ் வழங்க, மதனோ அதில் சுவாரஸ்யம் காட்டவில்லை. மேஜர் ஃபீஸ் கேட்க, ஒன்றும் இல்லாததற்கு எதற்கு ஃபீஸ் என்று குதர்க்கம் பேசுகிறது மதனின் பணக்கார புத்தி. ஆஸ்பத்திரியில் போராடிக்கொண்டிருக்கும் நண்பனைக் காப்பாற்ற வேண்டிய தவிப்பில் இருக்கும் மேஜர் மதனை வழிக்குக் கொண்டுவர ஒரு தந்திரமான விளையாட்டை மேலும்
No comments:
Post a Comment