சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை தெகிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள சிம்பன்சி குரங்கு ஒன்று முகத்தில் பலமாக அறைந்தது.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தெகிவளை மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்த அமைச்சர் பசில் ராஜபக்ச அங்கிருந்த சிம்பன்சி குரங்கு ஒன்றுக்கு கைலாகு கொடுக்க முனைந்தார்.
அப்போது அந்த சிம்பன்சி அவரது முகத்தில் ஓங்கி அறைந்தது.
இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
அருகில் நின்ற மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் அந்த சிம்பன்சியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அமைச்சர் பசில் ராஜபக்ச அதிர்ச்சியடைந்த போதும் இது நல்ல சகுனம் என்று சிரித்து சமாளித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment